கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் பலி

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் பலி

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் பலி

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2021 | 2:01 pm

Colombo (News 1st) மொறட்டுவை – கொழும்பு ரயில் மார்க்கத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி – நிவித்திகல பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல் பொல்கஹவெல பகுதியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அலவ்வ – பொல்கஹவெல ரயில் மார்க்கத்தில் கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் ஆளடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்