கொழும்பு குதிரை பந்தய திடலில் உள்ள உணவகத்தில் வெடிச்சம்பவத்துடன் தீ பரவல்

கொழும்பு குதிரை பந்தய திடலில் உள்ள உணவகத்தில் வெடிச்சம்பவத்துடன் தீ பரவல்

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2021 | 1:45 pm

Colombo (News 1st) கொழும்பு குதிரை பந்தய திடலின் கீழ் மாடியிலுள்ள சர்வதேச உணவக வளாகத்தில் வெடிச்சம்பவத்துடன் தீ பரவியுள்ளது.

இன்று (20) அதிகாலை தீ பரவியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

எரிவாயு கசிவினால் தீ பரவியிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ பரவலின் போது காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்