குதிரை பந்தய திடலில் ஏற்பட்ட தீ பரவலுக்கு எரிவாயு கசிவே காரணம்

குதிரை பந்தய திடலில் ஏற்பட்ட தீ பரவலுக்கு எரிவாயு கசிவே காரணம்

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2021 | 7:25 pm

Colombo (News 1st) கொழும்பு குதிரை பந்தய திடலின் கீழ் மாடியிலுள்ள சர்வதேச உணவக வளாகத்தில் ஏற்பட்ட தீ பரவலுக்கு எரிவாயு கசிவே காரணம் என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது.

பேக்கரியில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் LG கேஸ் எரிவாயு கசிந்து வெடிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தீ பரவியுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு குதிரை பந்தய திடலின் கீழ் மாடியிலுள்ள சர்வதேச உணவக வளாகத்தில் இன்று அதிகாலை வெடிச்சம்பவத்துடன் தீ பரவியது.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ பரவலின் போது காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்