580 ஆண்டுகளுக்கு பின்னர்  மிக நீண்ட சந்திர கிரகணம்

by Bella Dalima 19-11-2021 | 1:34 PM
Colombo (News 1st) மிக நீண்ட சந்திர கிரகணம் 580 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று (19) தோன்றும் என கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் பார்வையிட முடியாதென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளித்துறை விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இதனை இந்தியாவின் கிழக்கு பகுதிகளிலும் அமெரிக்கா, வடக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் வலய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் காண முடியுமென அவர் கூறினார். இன்று முற்பகல் 11.32-க்கு ஆரம்பமான சந்திர கிரகணம் மாலை 5.33-க்கு நிறைவடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, டிசம்பர் 4 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளித்துறை விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இத்தகைய கிரகணம் மீண்டும் 2669 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி தோன்றுமெனவும் கூறப்பட்டுள்ளது.