பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை டிசம்பர் மாதம் ஆரம்பம்

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை டிசம்பர் மாதம் ஆரம்பம்

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை டிசம்பர் மாதம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2021 | 2:06 pm

Colombo (News 1st) 2020 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வௌியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இதற்கமைய, ஒவ்வொரு மாணவரும் தான் தெரிவாகியுள்ள பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறிகள் தொடர்பில் அறிந்துள்ளதாக அவர் கூறினார்.

இதனையடுத்து, அவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் நடவடிக்கையே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, பல்வேறு பீடங்களையும் டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தின் முதற்பகுதியில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 41,000 -இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்