சுன்னாகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது தாக்குதல் ( CCTV )

சுன்னாகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது தாக்குதல் ( CCTV )

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2021 | 4:41 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவின் அம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் நேற்று தாக்கப்பட்டுள்ளார்.

சுண்ணாகம் பொலிஸ் பிரிவின் அம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவரை சிலர் தாக்கும் காட்சி அங்குள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

நேற்று (18) பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த 55 வயதான நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்றிரவு யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட குடும்பத் தகராறை அடிப்படையாகக் கொண்டு அவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கானவரின் அயல் வீட்டைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்