களு சாகரவின் உதவியாளர் ஆர்மி அமில கைது

களு சாகரவின் உதவியாளர் ஆர்மி அமில கைது

களு சாகரவின் உதவியாளர் ஆர்மி அமில கைது

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2021 | 1:49 pm

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் களு சாகர என்பவரின் உதவியாளரான ஆர்மி அமில பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கல்ல – தங்கெட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 3,780 மில்லிகிராம் ஹெரோயினும் வாளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஆர்மி அமில சில கொலை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளவர் என தெரியவந்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் தாக்குதல்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அறிவித்துள்ளது.

தற்போது வௌிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் களு சாகர என்பவர், குற்றச் செயல்களை நடத்துவதற்காக ஆர்மி அமில என்பவரை நேரடியாக பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்