இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2021 | 2:17 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் Shane McDermott, COVID தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் Shane McDermott-இற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பிரதான பயிற்றுவிப்பாளர் Mickey Arthur, துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் Grant Flower உள்ளிட்டோரும் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அணியில் வேறு எந்த வீரருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்