அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் Tim Paine இராஜினாமா

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் Tim Paine இராஜினாமா

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் Tim Paine இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2021 | 2:30 pm

Colombo (News 1st) அவுஸ்திரேலியா, இங்கிலாந்திற்கிடையிலான ஆஷஸ் தொடர் ஆரம்பமாக இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை Tim Paine இராஜினாமா செய்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவுஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றபோது, பந்தை சேதப்படுத்திய புகாரில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு Tim Paine-இடம் அணித்தலைவர் பதவி ஒப்படைக்கப்பட்டது.

பதவியேற்று சரியாக மூன்றாவது மாதத்தில், 2017 ஆம் ஆண்டில் Tim Paine மீது சக பெண் ஊழியர் ஒருவரால் பாலியல் சார்ந்த குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து இடம்பெற்ற விசாரணையில் Tim Paine மீது குற்றமில்லை என அறிவித்து, அவர் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியில் தொடர அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதியளித்திருந்தது.

இந்நிலையில், குறித்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், தலைவர் பதவியை Tim Paine இராஜினாமா செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்