40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வருகிறது 

40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வருகிறது 

40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வருகிறது 

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2021 | 10:36 am

Colombo (News 1st) 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து குறித்த கப்பல் நாட்டிற்கு வருகை தருவதாக இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹம்மட் உவயிஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது.

ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள், இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தில் உள்ளதாக அதன் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்