by Staff Writer 18-11-2021 | 8:54 AM
Colombo (News 1st) எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 1,400 ''சிசு செரிய'' பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
6 முதல் 9 ஆம் தரம் வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.