ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக செயலாளராக ஊடகவியலாளர் சென்சாய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

by Staff Writer 18-11-2021 | 8:02 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக செயலாளராக ஊடகவியலாளர் சென்சாய் ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பதவி நிலையாக இது வழங்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஷிஹான். பி.எம். கீர்த்தி குமாரவினால் சென்சாய் ஜூடின் சிந்துஜனுக்கு நியமனத்திற்கான சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு கொழும்பு டொரிங்டனில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.