வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோல்வி

யாழ். வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோல்வி

by Staff Writer 18-11-2021 | 1:53 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ​தோற்கடிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நகர சபையின் தலைவர் செல்வேந்திராவால் நேற்று (17) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. வாக்கெடுப்பின் போது அதிகாரத்திலுள்ள சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவாக 08 வாக்குகளும் எதிர்க்கட்சியினருக்கு 09 வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில், ஒரு வாக்கினால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது. வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் கோ. கருணானந்தராசாவின் மறைவின் பின்னர் இடம்பெற்ற தலைவர் தெரிவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து சுயேட்சைக் குழுவின் தலைவர் செல்வேந்திரா தலைவராகியமை குறிப்பிடத்தக்கது.