இன்றைய (18) வானிலை

இன்று (18) முதல் மழை குறைவடையக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 18-11-2021 | 7:00 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்று (18) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இன்று வடக்கு தமிழக கடற்பரப்பரப்பினூடாக இந்தியா நோக்கி நகரும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தாழமுக்கம் காரணமாக வட மாகாணத்திலும் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.