மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வு

மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வு; சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 18-11-2021 | 11:53 AM
Colombo (News 1st) மூதூர் - தீத்தான் தட்டி காட்டுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 04 உழவு இயந்திரங்கள் மூதூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நாளை (19) மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக மூதூர் பொலிஸார் குறிப்பிட்டனர். மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி வேறொரு இடத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.