பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் G.L.பீரிஸ்

பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் G.L.பீரிஸ்

by Staff Writer 18-11-2021 | 3:25 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துள்ளார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, COVID தொற்றை கட்டுப்படுத்துவதில் இலங்கை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில், வௌிவிவகார அமைச்சரினால் பங்களாதேஷ் பிரதமருக்கு தௌிவூட்டப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நீண்டகால பிரச்சினைகள் தொடர்பிலும் பேராசிரியர் G.L.பீரிஸினால் பங்களாதேஷ் பிரதமருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் டாக்கா இடையில் விமானத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.