60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (17) முதல் பூஸ்டர் தடுப்பூசி

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (17) முதல் பூஸ்டர் தடுப்பூசி

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (17) முதல் பூஸ்டர் தடுப்பூசி

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2021 | 6:55 am

Colombo (News 1st) நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இன்று (17) ஆரம்பிக்கப்படுகின்றது.

இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று 03 மாதங்கள் பூர்த்தியானவர்களுக்கே மூன்றாவது தடுப்பூசி ஏற்றப்படும் என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த காலங்களில் அதிகூடிய கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்களே முதல்கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வகையான தடுப்பூசி முதலில் பெற்றிருந்தாலும் பூஸ்டர் எனப்படும் மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றப்படும் என அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்