ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாம் பாலினத்தவர்கள்  

மூன்றாம் பாலினத்தவர்களை ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்ள புதிய விதிமுறைகள் வௌியீடு

by Bella Dalima 17-11-2021 | 2:47 PM
Colombo (News 1st) மூன்றாம் பாலினத்தவர்களை ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்வது தொடர்பான புதிய விதிமுறைகளை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வௌியிட்டுள்ளது. பெண்களுக்கான போட்டிகளில் மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்துகொள்வது அவர்களுக்கு முறையற்ற வகையில் அனுகூலமாக அமைவதை ஏற்றுக்கொள்ள முடியாதென சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களை இந்தப் போட்டிகளில் இணைத்துக்கொள்வதற்கான 10 கடப்பாடுகள் அடங்கிய புதிய விதிமுறைகள் நேற்று (16) வௌியிடப்பட்டன. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.