வௌ்ளவத்தையில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

வௌ்ளவத்தையில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2021 | 10:40 am

Colombo (News 1st) வௌ்ளவத்தை – ஹம்டன் ஒழுங்கையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் காயப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு (16) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர், களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எவ்வாறாயினும், குறித்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் காயமடைந்த நபர் தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்