ஒரு கிலோகிராம் பயறு 225 ரூபாவிற்கு சதொசவில் விற்பனை 

ஒரு கிலோகிராம் பயறு 225 ரூபாவிற்கு சதொசவில் விற்பனை 

ஒரு கிலோகிராம் பயறு 225 ரூபாவிற்கு சதொசவில் விற்பனை 

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2021 | 5:11 pm

Colombo (News 1st) ஒரு கிலோகிராம் பயறு இன்று (17) முதல் 225 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் பயறு 450 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை அனைத்து சதொச விற்பனை நிலையங்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.

நாட்டின் அநேகமான பகுதிகளில் அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்பட்டாலும் ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனி 122 ரூபாவிற்கும் சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபாவிற்கும் சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்