இயக்குநரும் நடிகருமான R.N.R.மனோகர் காலமானார்

இயக்குநரும் நடிகருமான R.N.R.மனோகர் காலமானார்

இயக்குநரும் நடிகருமான R.N.R.மனோகர் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2021 | 4:09 pm

இயக்குநரும் நடிகருமான R.N.R.மனோகர் இன்று (17) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.

நகுல் மற்றும் சுனைனா இணைந்து நடித்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான மாசிலாமணி படத்தை R.N.R.மனோகர் இயக்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ‘வேலூர் மாவட்டம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் சலீம், என்னை அறிந்தால், நானும் ரௌடி தான், வேதாளம், மிருதன், கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னவன் படத்தில் விவேக்குடன் இவர் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம்.

இந்த நிலையில், அவர் இன்று சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்