சோளச் செய்கையாளர்களுக்கு யூரியா உரம்; விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம்

சோளச் செய்கையாளர்களுக்கு யூரியா உரம்; விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம்

சோளச் செய்கையாளர்களுக்கு யூரியா உரம்; விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம்

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2021 | 10:12 pm

Colombo (News 1st) அநுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் சோளச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், இவ்வாறு வழங்கப்படுகின்ற யூரியாவிற்கு அரசாங்கம் அதிக விலையை நிர்ணயித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.

கலென்பிந்துனுவெவ, ஹொரவ்பொத்தான, கஹட்டகஸ்திகிலிய பகுதிகளை சேர்ந்த சோளச் செய்கையாளர்களுக்கு யூரியா உரத்தை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கமநல சேவைகள் மத்திய நிலையங்கள் ஊடாக அண்மையில் விநியோகிக்கப்பட்டிருந்தன.

1500 ரூபாவாக இருந்த ஒரு மூட்டை யூரியாவின் விலை தற்போது 6500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்தனர்.

வழங்கும் உரத்தின் அளவும் ஏக்கருக்கு 25 கிலோகிராமாக வரையறுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சோளச் செய்கையாளர்கள் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்