மன்னாரில் நீர்த்தாங்கி குண்டு வைத்து தகர்ப்பு

மன்னாரில் நீர்த்தாங்கி குண்டு வைத்து தகர்ப்பு

by Staff Writer 15-11-2021 | 10:40 PM
Colombo (News 1st) மன்னார் - கொந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு, கைவிடப்பட்டிருந்த பாரிய நீர்த்தாங்கி ஒன்று இன்று (15), தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பயன்படுத்தப்படாத நிலையில் வெடிப்பு ஏற்பட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக இந்த நீர்த்தாங்கி காணப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டு நீர்த்தாங்கி தகர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.