குருணாகல் வரையான மாத இறுதிக்குள் திறக்கப்படும்

குருணாகல் வரையான மாத இறுதிக்குள் திறக்கப்படும் - வீதி அபிவிருத்தி அதிகார சபை 

by Staff Writer 15-11-2021 | 5:03 PM
Colombo (News 1st) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி இம் மாத இறுதிக்குள் திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வீதி ஒழுங்குகளை அடையாளப்படுத்துவது போன்ற சிறு வேலைகள் எஞ்சியுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S.V.S. வீரகோன் குறிப்பிட்டார். மழை காரணமாக அந்த நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடவத்தை - மீரிகம பகுதியின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.