சீனாவின் சின்தாவோ நகர் – கண்டி நகர் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

சீனாவின் சின்தாவோ நகர் – கண்டி நகர் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2021 | 9:23 pm

Colombo (News 1st) சீனாவின் சிந்தாவோ நகருக்கும் கண்டி நகருக்கும் இடையில் இன்று (15)  புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கான சீனத் தூதுவரும் இதில் கலந்துகொண்டிருந்ததுடன், கண்டி மற்றும் சிந்தோவோ மேயர்கள் Online ஊடாக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

நகரங்களுக்கு இடையில் கல்வித்துறை, பொருளாதார தொடர்பு, தொழில்நுட்ப அறிவு, கலாசார மத விவகாரங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்த உடன்படிக்கையூடாக எதிர்பார்க்கப்படுவதாக கண்டி மாநகர மேயர் கேசர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்