Colombo (News 1st) 7 மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
