அகில இலங்கை கிராமிய கலை ஒன்றிய 3ஆவது வருட பூர்த்தி

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழா

by Staff Writer 14-11-2021 | 9:09 PM
Colombo (News 1st) அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழா கொழும்பில் இன்று (14) நடைபெற்றது. அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியத்தின் வருட பூர்த்தி விழா கொழும்பு - 13 கதிரேசன் வீதியிலுள்ள ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. விழாவை அலங்கரிக்கும் வகையில் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சக்தி FM, News1st முகாமையாளர் ஜெப்ரி ஜெபதர்ஷனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சக்தி TV, News1st உதவி முகாமையாளர் நாகலிங்கம் ஜெகநாத் கண்ணா, சக்தி TV ஔிப்பதிவாளர் எஸ். பாலசுப்ரமணியம் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.