நெனோ நைதரசன் திரவ பசளை பாவனை தொடர்பான செய்முறை நிகழ்வு…

நெனோ நைதரசன் திரவ பசளை பாவனை தொடர்பான செய்முறை நிகழ்வு…

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2021 | 5:36 pm

Colombo (News 1st) நெனோ நைதரசன் திரவப் பசளை பாவனை தொடர்பான செய்முறை நிகழ்வு இன்று (14) அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டது.

இறக்காமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை வயற்கண்டத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந்தியாவின் i.f.f.c.o நெனோ நைதரசன் உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு, இந்த சேதன திரவத்தை பாவனை செய்வது தொடர்பாக விவசாயிகளுக்கு தௌிவூட்டியது.

தொடர்ந்து இறக்காமம் கமநல சேவைபிரிவுக்குட்பட்ட பயிர் நிலங்களுக்கு இந்திய அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் நெனோ நைதரசன் திரவ உரம் விசிறப்பட்டது.

இந்திய குழுவில் நெனோ நைதரசன் உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்களான எஸ். பரஞ்சோதி, எஸ். மாரியப்பன் மற்றும் நிறுவனத்தின் விவசாயத்துறை நிபுணர்களான தரந்து சிங், அனில் யதோவ் ஆகியோர் இதில் கலந்து​கொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்