by Bella Dalima 13-11-2021 | 2:06 PM
Colombo (News 1st) இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 2021 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களிடையே தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளார்.
156 ஓட்டங்களைக் கொடுத்து அவர் 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
12 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவுஸ்திரேலியாவின் ஆதம் சம்பா (Adam Zampa) இரண்டாவது இடத்திலும், 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பங்களாதேஷின் ஷகீப் அல் ஹசன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.