14,000-ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள்

14,000-ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள்

14,000-ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Bella Dalima

13 Nov, 2021 | 2:12 pm

Colombo (News 1st) நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,950 ஆக அதிகரித்துள்ளது.

நவம்பர் 11 ஆம் திகதி இந்த மரணங்கள் அனைத்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களில் 11 ஆண்களும் 12 பெண்களும் அடங்குகின்றனர்.

அத்துடன், உயிரிழந்தவர்களில் 21 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.

இதேவேளை, நேற்று 723 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம்
தெரிவித்தது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,48,784 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5,23 ,122 பேர் குணமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்