சகிக்க முடியாதளவிற்கு அரச சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது: பசில் ராஜபக்ஸ தெரிவிப்பு

by Bella Dalima 13-11-2021 | 10:21 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அரச சேவைக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் குறித்து இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது. இதன்போது அவர் பின்வருமாறு பதில் வழங்கினார்,
நாட்டில் சகிக்க முடியாதளவிற்கு அரச சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் அரச சேவை நமக்கொரு சுமை என்பதனை நாம் நேர்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு விதத்திலும் இன்னும் ஓராண்டு காலத்திற்கு அரச சேவைக்காக பொதுமக்களின் பணத்தை செலவழிக்கும் இயலுமை இல்லை என்பதனை நான் தெளிவாகக் கூறியாக வேண்டும். அரச ஊழியர்களின் எண்ணிக்கையை விஸ்தரிக்க எமக்கு இயலுமை இல்லை. எனினும், ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கைக்கு அமைவாக வருடாந்தம் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இளம் தரப்பை உள்வாங்க நாம் நடவடிக்கை எடுப்போம்