வறிய மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தால் பயனில்லை: ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

வறிய மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தால் பயனில்லை: ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

வறிய மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தால் பயனில்லை: ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2021 | 1:42 pm

Colombo (News 1st) வறிய மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித ஒதுக்கீடுகளும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டினார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தை எதிர்க்கட்சியின் சார்பில் ஆரம்பித்து வைத்த போது அவர் இதனை கூறினார்.

வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த நிதி அமைச்சர், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தொற்றை காரணமாக கூறியதாகவும், நெற்செய்கை மற்றும் அரிசி உற்பத்தி இந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எனினும், தற்போது உணவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாடு 50 வருடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் விலையை குறைப்பதாகக் கூறிய அரசாங்கம், மக்கள் மீது தொடர்ச்சியாக வரிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

செல்வந்தர்களை பாதுகாத்து, வறிய மக்கள் மீது அரசாங்கம் வரிச்சுமையை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்