மன்னாரில் பெண்ணின் சடலம் மீட்பு

மன்னாரில் பெண்ணின் சடலம் மீட்பு

மன்னாரில் பெண்ணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2021 | 1:48 pm

Colombo (News 1st) மன்னார் கோந்தை பிட்டி கடல் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், பிரேத பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடந்த புதன்கிழமை (10) மாலை மன்னார் பாலப் பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்தமை தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

இன்று மீட்கப்பட்ட சடலம் குறித்த பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், இதுவரை இந்த விடயம் உறுதி செய்யப்படவில்லை.

மன்னார் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்