பொதுச்சேவை நாட்டிற்கு பாரிய சுமை

பொதுச்சேவைகளுக்கு பொதுமக்கள் நிதியை பயன்படுத்தப் போவதில்லை: பசில் தெரிவிப்பு

by Bella Dalima 13-11-2021 | 2:00 PM
Colombo (News 1st) எதிர்வரும் காலங்களில் பொதுச்சேவைகளுக்காக பொதுமக்கள் நிதியை பயன்படுத்தப் போவதில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொதுச்சேவை என்பது நாட்டுக்கு பாரிய சுமை என்பதை வௌிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார். இதனால் எதிர்வரும் ஒரு வருடங்களுக்கு பொதுச்சேவைக்காக பொதுமக்கள் நிதியை பயன்படுத்துவதற்கான இயலுமை இல்லை என நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்