இறுதிப் ​போட்டி வாய்ப்பை இழந்தார் Devon Conway

T20 உலகக்கிண்ண இறுதிப் ​போட்டி வாய்ப்பை இழந்தார் Devon Conway

by Bella Dalima 12-11-2021 | 6:38 PM
Colombo (News 1st) நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் Devon Conway-க்கு இம்முறை T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளது. அவருக்கு வலது கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை வௌியிட்டுள்ளது. இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் டெவோன் கொன்வே உபாதைக்குள்ளானார். இதன் காரணமாக இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கான வாய்ப்பை அவர் இழந்துள்ளார். T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுதினம் (14) இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.