யாழ்ப்பாணத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு

யாழ்ப்பாணத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2021 | 7:16 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவிய பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் நிவாரணப் பயணம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நேற்றும் இன்றும் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் சக்தி குழுவினர் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளித்தனர்.

யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொட்டும் மழையிலும் நிவாரணப்பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

மக்கள் சக்தியின் நிவாரணப் பயணத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/58, நாரந்தனை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் மழை வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதனிடையே தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் J – 222, இளவாலை வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவின் சேந்தாங்குளம் கிராமத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் நேற்று நள்ளிரவு பகிர்ந்தளிக்கப்பட்டன.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் J /213 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களும் இம்முறை வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த மக்களுக்கான நிவாரணப் பொருட்களும் மக்கள் சக்தி குழுவினரால் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லுண்டாய் குடியிருப்பு பகுதியிலும், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் மக்கள் சக்தி குழாத்தினரால் நேற்று நள்ளிரவு வழங்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்