சென்னையில் பாரிய வௌ்ளம்: 14 ,135 பேர் முகாம்களில்

சென்னையில் பாரிய வௌ்ளம்: 14 ,135 பேர் முகாம்களில்

சென்னையில் பாரிய வௌ்ளம்: 14 ,135 பேர் முகாம்களில்

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2021 | 7:06 pm

Colombo (News 1st) 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் சென்னையில் பாரிய வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பித்தது. இதனையடுத்து,
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்தது.

சென்னையின் ஏரிகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், முக்கிய பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கின.

இதனிடையே, வௌ்ளத்தினால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் 289 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 14 ,135 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மாத்திரம் 44 இடைத்தங்கல் முகாம்களில் 2,699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்