வடகிழக்கு சீனாவில் பனிப்பொழிவு

வடகிழக்கு சீனாவில் பனிப்பொழிவு; போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

by Bella Dalima 11-11-2021 | 3:42 PM
Colombo (News 1st) வடகிழக்கு சீனாவில் 116 வருடங்களின் பின்னர் பாரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. லியோனிங் மாகாண தலைநகர் சென்யாங்கில் 51 சென்டிமீட்டர் உயரத்திற்கு பனி படர்ந்துள்ளது. 1905 இன் பின்னர் பதிவாகியுள்ள அதிகூடிய பனிப்பொழிவு இதுவென சின்சுவா செய்தி வௌியிட்டுள்ளது. இதனால் அங்கு வாகன மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குளிர் அலை ஆரம்பித்ததில் இருந்து, வடகிழக்கு சீனாவில் வெப்பநிலை சில பகுதிகளில் 14 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைந்துள்ளது. லியோனிங் நகரமான அன்ஷானில் அதிகபட்சமாக 53 செமீ (21 அங்குலம்) பனி ஆழம் பதிவாகியுள்ளது. பனிப்புயல் ஏற்படும் வாய்ப்புள்ளதால், வடகிழக்கு சீனாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.