கொழும்பு - கண்டி போக்குவரத்திற்கான மாற்றுவழிகள்

கொழும்பு - கண்டி போக்குவரத்திற்கான மாற்றுவழிகள்

by Staff Writer 11-11-2021 | 9:57 AM
Colombo (News 1st) மண்சரிவு அபாயம் காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்றிரவு (10) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அதன்படி

,

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் அம்பேபுஸ்ஸ சந்தியில் திரும்பி குருணாகல்

,

மாவத்தகம

,

கலகெதர

,

கட்டுகஸ்தொட்ட ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர மாவனெல்லை நகரின் எஸ் ஓ சந்தியின் வலதுபுறமாக திரும்பி ஹெம்மாத்தகம, அம்புலுவாவ, கம்பளை, பேராதனை ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களும் இந்த வீதிகளை பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.