வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் ஐவருக்கு பிணை

வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் ஐவருக்கு பிணை

எழுத்தாளர் Bella Dalima

11 Nov, 2021 | 8:40 pm

Colombo (News 1st) நூறு நாட்களுக்கு அதிகமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் 5 பேருக்கு ஹோமாகம மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்