கொழும்பு வர்த்தகர் அநுராதபுரத்தில் கொலை; சந்தேகநபர் கைது

கொழும்பு வர்த்தகர் அநுராதபுரத்தில் கொலை; சந்தேகநபர் கைது

கொழும்பு வர்த்தகர் அநுராதபுரத்தில் கொலை; சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Bella Dalima

11 Nov, 2021 | 4:11 pm

Colombo (News 1st) அநுராதபுரம் – கல்போத்தேகம பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – 02 நவம் மாவத்தையை சேர்ந்த 34 வயதான வர்த்தகர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு அவர் சென்ற போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது, கூரான ஆயுதத்தால் குறித்த வர்த்தகர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்