கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழை

கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழை

கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழை

எழுத்தாளர் Bella Dalima

11 Nov, 2021 | 4:33 pm

Colombo (News 1st) வங்கக் கடலில் நேற்று (10) உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் கடற்கரை பகுதியில் சென்னைக்கு அருகில் இன்று மாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

கரையைக் கடக்கும்போது 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

மழை மற்றும் வௌ்ளம் காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்