ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழ் உறுப்பினர்கள்

''ஒரே நாடு - ஒரே சட்டம்'' ஜனாதிபதி செயலணிக்கு 3 தமிழ் உறுப்பினர்கள் நியமனம்

by Staff Writer 10-11-2021 | 2:06 PM
Colombo (News 1st) ''ஒரே நாடு - ஒரே சட்டம்'' ஜனாதிபதி செயலணிக்கு 03 தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயாப்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே ஜனாதிபதி செயலணிக்கு நியமித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையில் 11 அங்கத்தவர்களை கொண்ட ஜனாதிபதி செயலணி ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டது. இந்த செயலணிக்கு மேலும் மூன்று தமிழ் உறுப்பினர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.