வௌ்ளத்தில் சிக்கியிருந்த 71பேர் கடற்படையால் மீட்பு

கற்பிட்டியில் வௌ்ளத்தில் சிக்கியிருந்த 71 பேர் கடற்படையால் மீட்பு 

by Staff Writer 09-11-2021 | 2:43 PM
Colombo (News 1st) கற்பிட்டி - பாலாவி பகுதியில் பலத்த மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கிய 71 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, உரிய நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது. பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேல், தென், வட மத்திய, வட மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை - பரகொட, இரத்தினபுரி - நவநகர், காலி - உடலமத்த, புத்தளம் - பாலாவி, வண்ணாத்திவில்லு, கரம்பே, குருணாகல் -  கிரிஉல்ல மற்றும் அனுராதபுரம் - இராஜாங்கனை ஆகிய பகுதிகளுக்கு கடற்படையின் 10 குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதனை தவிர, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் மேல், தென், வட மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் 60 குழுக்கள் தயார் நிலையிலுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.