மக்கள் சக்தி நிவாரண பயணம் நாளை (10) ஆரம்பம்

மக்கள் சக்தி நிவாரண பயணம் நாளை (10) ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2021 | 10:11 pm

Colombo (News 1st) கடும் மழைனால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக மக்கள் சக்தி நிவாரணப் பயணம் நாளைய தினம் (10) புத்தளம் நோக்கி ஆரம்பமாகவுள்ளது.

வௌ்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் சக்தி நிவாரணப் பயணம் மூலம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

வௌ்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட மக்களுக்கு நாளை உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

அதற்கான ஏற்பாடுகள் இன்று (09) நடைபெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்