கன மழையினால் ஐவர் உயிரிழப்பு

கன மழையினால் ஐவர் உயிரிழப்பு; 4,391 பேர் பாதிப்பு

by Staff Writer 07-11-2021 | 4:33 PM
Colombo (News 1st) நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதனிடையே இருவர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மழையுடனான வானிலையினால் 1,143 குடும்பங்களை சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று 635 வீடுகள் பகுதியளவிலும் 12 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 09 பாதுகாப்பு அரண்களில் இதுவரை 257 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.