ஓமந்தை ஈய தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஓமந்தை ஈய தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஓமந்தை ஈய தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2021 | 10:26 pm

Colombo (News 1st) வவுனியா – ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஈயத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இயந்திரப்பகுதிக்குள் ஈயத்தினை உருக்குவதற்காக பயன்படுத்தப்படும் கற்சுவரை உடைத்துக் கொண்டிருந்த போது குறித்த சுவர் ஊழியர் ஒருவர் மீது இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மாத்தளையைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்