எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு 

சியரா லியோன் தலைநகரில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு 

by Staff Writer 06-11-2021 | 4:18 PM
Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் (Sierra Leone) தலைநகர் ப்ரீடவுனில் (Freetown) எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91  பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வௌியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். விபத்தில் பஸ்ஸொன்று முழுமையாக தீப்பற்றியுள்ளதுடன், அருகிலிருந்த வர்த்தக நிலையங்களும் தீப்பற்றியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.