வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழப்பு

வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழப்பு

வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2021 | 11:29 am

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை, மொனராகலை, பண்டாரகம மற்றும் பொல்பித்திகம ஆகிய பிரதேசங்களில் குறித்த விபத்துகள் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – முருகாபுரி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் 53 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொனராகலை – வெல்லவாய வீதியின் கச்சேரி சந்தியில் பஸ் மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

பண்டாரகம பகுதியில் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொல்பித்திகம – கலுகல்ல பாலத்தின் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று  விபத்துக்குள்ளானதில் 34 வயதான ஒருவர் பலியாகியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்