டிக்கோயா – ஹார்ட்லி தோட்டத்தில் கோழி கூட்டிற்குள் சிக்கிய சிறுத்தை

டிக்கோயா – ஹார்ட்லி தோட்டத்தில் கோழி கூட்டிற்குள் சிக்கிய சிறுத்தை

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2021 | 3:55 pm

Colombo (News 1st) ஹட்டன் – டிக்கோயா – ஹார்ட்லி தோட்டத்தில் கோழிக் கூடொன்றில் சிக்கிய சிறுத்தை மீண்டும் காட்டுக்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.

கோழிகளை வேட்டையாடுவதற்காக தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை நேற்றிரவு (05) கோழிக் கூட்டிற்குள் சிக்குண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தோட்ட அதிகாரிகள் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததை அடுத்து, சிறுத்தையை மீண்டும் காட்டிற்குள் விடுவிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சிறுத்தை காட்டிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.

கோழிகள் மற்றும் நாய்களை வேட்டையாடுவதற்காக சிறுத்தைகள் தமது தோட்டப்பகுதிக்கு இரவு நேரத்தில் வருகை தருவதாக தோட்ட மக்கள் இதன்போது கூறியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்